2/39, வெங்கடேஷ்வரா நகர், ஜேஎம்சி வளாகம், தரகம்பட்டி.,
உங்களின் அனைத்து நிதி தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம்....

500

+
வாடிக்கையாளர்கள்

300

+
குழுக்கள்

100

+
பணியாளர்கள்

10

+
அனுபவம்
பழனி ஸ்ரீ ஜெயமுருகன் சிட்ஸ்

நாங்கள் யார்?

எங்களுடைய ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய கனவு என்னவென்றால் கிராமப்புற மக்கள் தங்களுடைய கனவுகளை அடைய எளியமுறையில் உதவிடவேண்டும் என்பதே ஆகும்.

அவர்களின் கனவுகளை நிறைவேற்றிட தேவைப்படும் நிதிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நிதி திட்டம் தான் சீட்டுத்திட்டம்

இத்திட்டத்தை செயல்படுத்தி மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் பழனி ஸ்ரீ ஜெயமுருகன் சிட்ஸ்(பி)லிட் நிறுவனம்.

இந்நிறுவனம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் நாள் தொடங்கப்பட்டது.எங்கள் நிறுவனத்தில் 50,000 சீட்டுக்கள் முதல் 50,00,000 வரை சீட்டுக்கள் நடத்தி வருகிறேம்.

வணிகர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிட 1கோடி வரை சீட்டுக்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

எங்களோடு இணைந்து உங்களுடைய கனவு வாழ்க்கையை சிறப்பாக அமைத்திட வாழ்த்தி வரவேற்கிறோம்.

எங்களிடம்

10+ வருட அனுபவம் உள்ளது.

உங்கள் நம்பிக்கையின் இரண்டாம் தலைமுறையைக் கொண்ட நிறுவனம். எங்கள் குழும நிறுவனங்கள் விரைவான வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, விதிவிலக்கான சேவைத் தரத்திற்கு சாட்சியமளிக்கின்றன. பழனி ஸ்ரீ ஜெயமுருகன் சிட்ஸ் நாங்கள் சுமார் 10 வருடங்களாக நிதித் துறையில் அனுபவங்களைப் பெற்றுள்ளோம் . தமிழ்நாட்டில் 3 சிட் ஃபண்ட் கிளைகள் உள்ளன,.

எங்கள் சிறந்த சேவைகள்

பாதுகாப்பான பரிவர்த்தனைகள்:

தங்களது நிதி சார்ந்த பரிவர்த்தனைகள்,வங்கி கணக்குகளுடனும் மத்திய மாநில அரசுகளின் பதிவு பெற்றதாகவும் உள்ளது.

நல்ல வருமானம்:

வங்கிகளோடும் மற்ற நிதி நிறுவனங்களோடும் ஒப்பிடுகையில் அதிகப்படியான வருமானம்.

நல்ல முதலீடு:

இங்கு செய்யப்படும் முதலீடு பிற்காலத்தில் தங்களது கனவுகளை அடைந்திட 100% உதவும்.

எளிய நடைமுறைகள்:

தங்களது சேமிப்பில் இருந்து அவசர தேவைக்கு நிதியை பெறுவதற்க்கு எளிய முறை பின்பற்றப்படுகிறது.

ஆவணங்கள் மற்றும் பிணையங்கள்:

வங்கிகளுடன் ஒப்பிடும் போது சிட்ஃபண்ட்ஸ் நிறுவனங்களுக்கு குறைவான ஆவணங்களே தேவைப்படுகின்றன. பிணையத்தை பற்றிய அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டவை மற்றும் வட்டி விகிதம குறைவாகவே தீர்மானிக்கப்படுகிறது.

தொழில்முறை ஆலோசனை

நமக்கு ஏன் சிட் ஃபண்ட் தேவை

ஒரு சிட் ஃபண்ட் திட்டத்தில், முதலீட்டாளர்களின் எண்ணிக்கைக்கு (உறுப்பினர்கள் அல்லது சந்தாதாரர்கள்) சமமான காலத்திற்கு, சிட் மதிப்பிற்கு ஒரு குழுவினர் அவ்வப்போது பங்களிக்கின்றனர். சேகரிக்கப்பட்ட தொகை, ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு வழங்கப்படும்..

சிட்ஸில் முதலீடு செய்யுங்கள்

சீட்டு அவரவர் தேவைக்காகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இது எந்த நேர இடைவெளியிலும் திரும்ப பெறப்படலாம். சிட்ஃபண்டுகளில் இருந்து கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு சிக்கலான நடைமுறைகள் ஏதும்இல்லை.எளிமையான நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

சிட்டு(CHITS) என்றால் என்ன?

ஒரு சிட்ஃபண்ட்ஸ் திட்டத்தில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கைக்கு (20 சந்தாதாரர்கள் 20 மாதங்கள்) சமமான காலத்திற்கு சீட்டு மதிப்பிற்கு ஓரு குழுவினர் அவ்வவ்போது பங்களிக்கின்றனர்.இந்த குழுவிலிருந்து சேகரிக்கப்படும் தொகை ஏலம் மூலம் (or) வட்டி கணக்கிடுதல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.

சிட் ஃபண்ட் என்றால் என்ன?

ஒரு சிட்ஃபண்ட் நிறுவனம் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFC) வகையின் கீழ்வருகிறது. சிட்ஃபண்ட் வணிகமானது “சிட்ஃபண்ட் பிசினஸ்” என்ற வணிக நோக்கத்துடன் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகத் தொடங்கப்படுகிறது. சிட்ஃபண்ட் நிறுவனம் மத்திய மாநில அரசுகளின் பதிவு பெற்று பதிவு சான்றிதழைப் பெறலாம். புதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமே சீட்டை (CHITS) நடத்த முடியும். தொடர்ச்சியான வணிகத்தை செயல்படுத்த முடியும்.

ஸ்ரீ ஜெயமுருகன் சிட்ஸ் -ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும் ?

100% பாதுகாப்பான மற்றும் சிறந்த முதலீட்டு நிறுவனம். புத்திசாலித்தனமான நிதித்தேர்வுகளைச் செய்ய உங்களுக்கு உதவுகிறது. உங்கள் வருமானத்திற்கு தகுந்த திட்டங்களை வழங்குகிறது. அதிக வருமானம் மற்றும் சிறந்த நிதி ஆலோசனை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் நட்பு மற்றும் சிறந்த சேவை, எளிதான அணுகுமுறை, உடனடி பட்டுவாடாத் தொகை வழங்கும் நிறுவனம். பணிவான மற்றும் மதிப்புமிக்க வார்த்தைகளோடு சேவை செய்யும் பணியாளர்கள். நம்பிக்கைக்கு அடையாளமாய் சொந்த கட்டிட அலுவலகம், மிகச்சிறந்த சேவை மற்றும் வணிக உத்திரவாத பதிவு பெற்ற நிறுவனம்.

சிட் ஃபண்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

பதிவு செய்யப்பட்ட சிட்ஃபணடுகள் (நிறுவனங்கள்) சீட்டு நிதிச்சட்டம் 1982 - ன் கீழ் கடுமையான விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் சீட்டுகளில் முதலீடு செய்யப்படும் பணம் மிகவும் பாதுகாப்பானது. சிட்ஃபண்ட் நிறுவனங்கள் தாங்கள் நடத்தும் அனைத்து சீட்டுகளின் மொத்த சீட்டு தொகையில் 100%க்கு சமமான தொகையை சீட்டு பதிவாளார் என்ற பெயரில் வங்கிகளில் நிலையான வைப்புத்தொகையில் சிட் காலம் முழுவதும் வைத்திருக்க வேண்டும்.